வளநாட்டு கோவிலில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பக்தர்கள் முற்றுகை போராட்டம்

வளநாட்டு கோவிலில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பக்தர்கள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-25 19:25 GMT

மணப்பாறை அருகே வளநாட்டில் பொன்னர்-சங்கர் கோவில் மாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில் வளாகத்தில் பக்தர்களுக்குத் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என கூறியும், பக்தர்களிடமிருந்து பல்வேறு வகையில் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்தும் வளநாடு ஊராட்சி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகள் கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பக்தர்களின் திடீர் போராட்டத்தால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்