ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

கார்த்திகை மாத அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று பக்தர்கள் குவிந்து புனித நீராடினர்.

Update: 2022-11-23 18:45 GMT

ராமேசுவரம், 

கார்த்திகை மாத அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று பக்தர்கள் குவிந்து புனித நீராடினர்.

கார்த்திகை மாத அமாவாசை

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாட்களிலும், மாகார்த்திகை மாத அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று பக்தர்கள் குவிந்து புனித நீராடினர்.ந்தோறும் வரும் அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் கார்த்திகை மாதத்தின் அமாவாசையான நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.

முன்னோரை வேண்டி கடற்கரையில் திதி, தர்ப்பண பூஜையை பலர் செய்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினார்கள்.

பக்தர்கள் கூட்டம்

ராமநாதசுவாமி கோவிலிலும் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சுவாமி சன்னதி பிரகாரத்தில் இலவச மற்றும் சிறப்பு தரிசன பாதையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர்.

இம்முறை அய்யப்ப பக்தர்கள் வருகையும் அதிக அளவில் இருந்ததால், மற்ற மாத அமாவாசை நாட்களைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், அதற்கு ஏற்ப கோவில் நிர்வாகம் முன் ஏற்பாடுகளை செய்யாததால் பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மூன்றாம் பிரகாரத்துக்கான பாதை மற்றும் வெளியே வரும் பாதைகளில் பக்தர்கள் அவதி அடைந்ததை காண முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்