அடையாளம் தெரியாத வாகனம் மோதி பக்தர் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பக்தர் பலியானார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கருத்த பாண்டியன் மகன் சிவ கணேசன் (வயது 29). இவர் புத்தூரில் நடைபெற்ற அய்யப்ப சுவாமி பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் புத்தூரிலிருந்து தளவாய்புரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது புனல்வேலி விலக்கு பகுதியில் வரும்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு சென்று விட்டது. இதில் கீழே விழுந்த அவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருத்த பாண்டியன் அளித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.