தாமரைக்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் தொடக்கம்
தாமரைக்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் தொடங்கியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா நடந்தது. இதில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஒன்றிய கவுன்சிலர் வளர்ச்சி நிதியில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. டாக்டர் சரண்யா வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் சரஸ்வதி ஜெயவேல் பணிகளை ெதாடங்கி வைத்தார். வெங்கட்டரமணபுரம் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மூலம் ரூ.6.25 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கும் பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இளங்கோவன், கவிதா முத்துவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.