சீர்காழி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள்

சீர்காழி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள்

Update: 2022-10-07 18:45 GMT

சீர்காழி ஒன்றியத்தில் நடந்த வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகண்ணன் ஆய்வு செய்தார்.

ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சைக்கிள் நிறுத்தும் இடம், முருங்கை நர்சரி, மந்தகரையில் பேவர் பிளாக் சாலை ஆகிய பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் முருகண்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து புது குப்பம் தார்சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு, விரைந்து பணியை முடிக்க அலுவலர்களை கேட்டுக்கொண்டார். பின்னர் பெருந்தோட்டம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் பஸ் நிழலகம், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு கட்டப்பட்டு வரும் வீடுகள் உள்ளிட்ட பணிகளையும் பார்வையிட்டார்.

வளர்ச்சி பணிகள்

தொடர்ந்து கீழ சட்டநாதபுரம், மங்கைமடம் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சோமசுந்தரம், துரைராஜ், ஒன்றிய பொறியாளர்கள் தெய்வானை, சிவக்குமார், ஓவர்சியர் பாபு, ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்