ரூ.10½ கோடியில் வளர்ச்சி பணிகள்-கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.10½ கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வோனா ஆய்வு செய்தார்.

Update: 2023-06-15 18:45 GMT

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.10½ கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வோனா ஆய்வு செய்தார்.

ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வோனா, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், மற்றும் அதிகாரிகளுடன்ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகத்தினால் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திட்டப்பணிகள்

அதுமட்டுமன்றி, அனைத்துத்துறை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, துறை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட முதன்மை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு, பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம், நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், தேவையான நிதிநிலைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.

எரிவாயு தகனமேடை

முன்னதாக, திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், மாரநாடு கிராமத்தில் 15-வது நிதிக்குழு மானிய நிதிதிட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார துணை மருந்தக கட்டிடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம், பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கட்டிடம் ஆகிய பணிகள் உள்பட ரூ.10.48 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 9 வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர், மாவட்ட கலெக்டருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ரத்தினவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா(சிவகங்கை), பால்துரை(தேவகோட்டை) மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்