ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள்

ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகளை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

Update: 2022-11-10 18:18 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் தொடக்கவிழா ஏசியன் நகரில் நடந்தது. துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் ஆம்பூர் வில்வநாதன், குடியாத்தம் அமலு விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், துத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜய், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன், துத்திப்பட்டு ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி, துத்திப்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நாகராஜ், சுப்பிரமணி, அண்ணாதுரை, சுகன்யா பிரகாஷ், தம்பிதுரை, விஜயாசேகர், ஜெயந்தி ராமமூர்த்தி, பவானி விஜய், நிதாஆப்ரின் அக்பர், துளசி சங்கர், குமரேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்