ரூ.36 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
தளியில் ரூ.36 லட்சத்தில் வளர்ச்சி பணிகளை ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;
தேன்கனிக்கோட்டை
தளி சட்டமன்றத் தொகுதி கோட்டை உலிமங்கலம் மற்றும் கண்டகாணப்பள்ளி ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இந்த பணிகளை ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தலட்சுமி, சென்னகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் பூதட்டியப்பா, ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாராயணசாமி, பார்வதி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.