வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்

Update: 2022-06-10 17:43 GMT

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லலிதா முன்னிலையில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். மேலும், சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.90 லட்சத்தில் உள் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் கட்டிடம், ரூ.2 கோடியே 60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், எரிவாயு தகன மேடை, நகராட்சி உரகிடங்கில் ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் திடக்கழிவு மேலாண்மை மையம், சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் அலுவலக தொடர்பான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ராஜகுமார் எம்.எல்.ஏ., மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன், நகராட்சி மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர்.








Tags:    

மேலும் செய்திகள்