திருவையாறு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்

திருவையாறு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்

Update: 2022-11-17 19:57 GMT

திருவையாறு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வு

திருவையாறை அடுத்த கல்யாணபுரம் முதல்சேத்தி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.15.6 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பொது வினியோக கட்டிடம், பொன்னாவரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.15.12 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடம், ஆதிதிராவிடர் தெருவில் 14-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம், ரூ.5.25 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் பொது கழிவறை ஆகியவற்றை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கல்யாணபுரத்தில் ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளியில் பள்ளி கட்டிடம், நடுக்காவேரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் ஆகியவற்றின் உறுதித்தன்மை, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

ஊராட்சி மன்ற அலுவலகம்

நடுக்காவேரி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் ஊராட்சிமன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை கட்டிடம், நடுக்காவேரி சுகாதார ஆரம்ப நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் ஆய்வகம் இடம் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ஜான்கென்னடி, ஒன்றிய பொறியாளர்கள் விஜயகுமார், மணிகண்டன், தமிழ் மற்றும் பணிப்பார்வையாளர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்