விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.;

Update: 2022-09-02 16:50 GMT


விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், மாவட்ட ஊராட்சி செயலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட ஊராட்சி மூலம் செயல்படுத்தப்படும் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் சுகாதார பணிகள், குடிநீர் பணிகள், சாலை பணிகள் என 81 வளர்ச்சி திட்டப்பணிகளை ரூ.5 கோடியே 80 லட்சத்தில் மேற்கொள்வது, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை அறிவித்து அத்திட்டம் வருகிற 5-ந் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்வது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்