வளர்ச்சி திட்ட பணிகள்

கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-02-23 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

கீழ்வேளுர் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி கீழ்வேளூர் ஒன்றியத்தில் திருக்கண்ணங்குடி ஊராட்சியில் ரூ.14.59 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம், அகரகடம்பனூர் ஊராட்சியில் ரூ.11.62 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம், ஆனைமங்கலம் ஊராட்சியில் ரூ.28.60 லட்சம் மதிப்பீட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.

ரேஷன் கடை கட்டிடம்

குருக்கத்தி ஊராட்சியில் ரூ.11.62 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம், 75-அனக்குடி ஊராட்சியில் ரூ.14.59 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் மற்றும் ரூ.11.62 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து இருக்கை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.52.48 லட்சத்தில் நெல்களம் அமைத்தல், சமத்துவ மயானம் சாலை ரூ.39.03 லட்சத்தில் சிமெண்டு சாலையாக அமைக்கும் பணி, ரூ.22.62 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெல் கொள்முதல் நிலையம்

சிகார் ஊராட்சியில் ரூ.28.60 லட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம், ரூ.14.59 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணிகள், தெற்குபனையூர் ஊராட்சியில் ரூ.14.59 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்டும் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால், ராஜ்குமார் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், அரசுத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்