வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும்
காரியாபட்டி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தினார்.
காரியாபட்டி,
காரியாபட்டி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தினார்.
புதுப்பிக்கப்பட்ட நூலகம்
காரியாபட்டி அருகே கல்குறிச்சி சமத்துவபுரத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள், எஸ்.கல்லுப்பட்டி ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட நூலகம் ஆகியவற்றை கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு மூலம் முருங்கை நர்சரி அமைத்தல், கம்பிக்குடி ஊராட்சியில் நாற்றாங்கால் நர்சரி பண்ணை, வினோபா நகரில் பிரதான் மந்திரி ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடு ஆகிய பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார். சூரனூர் கிராமத்தில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்தை கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணி
காரியாபட்டி யூனியன் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் கருப்பையா, உதவி பொறியாளர்கள் சுப்பையா, காஞ்சனாதேவி, மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், காரியாபட்டியூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் இருந்தனர்.