வளர்ச்சி திட்ட பணிகளை புகழேந்தி எம்.எல்.ஏ. ஆய்வு

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை புகழேந்தி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தாா்.

Update: 2022-06-04 15:07 GMT

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி ஒன்றியம் பனப்பாக்கம், சிறுவள்ளிக்குப்பம், வாக்கூர், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை புகழேந்தி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் குறித்தும், தொழிலாளர்களின் வங்கி கணக்கில் கூலித்தொகை வருகிறதா? என்றும் தொழிலாளர்களிடம் அவர் கேட்டறிந்தார். பனப்பாக்கத்தில் ரூ.17 லட்சத்து 37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வடிகால் வாய்க்காலை அவர் பார்வையிட்டார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், குலோத்துங்கன், ஒன்றிய பொறியாளர் கங்காதரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிதுரை, கண்காணிப்பு குழு உறுப்பினர் எத்திராசன், மாவட்ட துணை அமைப்பாளர் சாம்பசிவம், ஊராட்சி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்