ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் விக்கிரவாண்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் விக்கிரவாண்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கீதஅரசி ரவிதுரை தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் ஜீவிதா ரவி, வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக புகழேந்தி எம்.எல்.ஏ., கல ந்து கொண்டு ஒன்றியத்தில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றி, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, குணசேகரன், கருணாகரன், இளநிலை உதவியாளர் முருகதாஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் முகிலன், அருணாசலம், சத்யா, பாரதி, ராஜேஸ்வரி, முனுசாமி, சாவித்திரி, ரவிச்சந்திரன், ஏகாம்பரம், செல்வம், நளினி, ராஜாம்பாள், அன்பரசி, செந்தில்குமார், மகேஸ்வரி, இளவரசி, சாந்தி, செண்பகசெல்வி, கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.