பள்ளிகளில் காலை உணவு திட்ட முன்னேற்பாடு பணி
பள்ளிகளில் காலை உணவு திட்ட முன்னேற்பாடு பணி ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.
திருவெண்காடு:
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 64 தொடக்கப்பள்ளிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சிகளில் அமைந்துள்ள அரசு தொடக்க பள்ளிகளில் காலை உணவு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று நேரில் சென்று சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) இளங்கோவன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் தெய்வானை, சிவக்குமார், கலையரசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.