வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டம்

வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-18 19:00 GMT

அரியலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். கலெக்டர் ரமணசரஸ்வதி, க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 43 திட்டங்கள் குறித்தும், அதன் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அதன் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களால் பொதுமக்கள் பயன்பெறுவதுடன், அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் திருமாவளவன் எம்.பி. அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்