இசைப்பள்ளி மாணவர்களுக்கு தேவாரம் ஒப்புவித்தல் போட்டி

இசைப்பள்ளி மாணவர்களுக்கு தேவாரம் ஒப்புவித்தல் போட்டி 21-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-07-11 18:45 GMT

சிவகங்கையில் உள்ள அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் சிவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மாவட்ட அரசு இசைப்பள்ளி மற்றும் திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி மற்றும் இசை கல்வி அறக்கட்டளை இணைந்து மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவாரம் மற்றும் திருவாசக பாடல்கள் ஒப்பிக்கும் போட்டியை நடத்துகின்றன.

இந்த போட்டி வருகிற 21-ந்தேதி காலை 10 மணிக்கு சிவகங்கை பனங்காடி சாலையில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடக்கிறது. இதில் 6, 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேவார பதிகங்களும், 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேவார பதிகங்கள் மற்றும் சிவபுராணம் போட்டியும் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள ஒரு பள்ளிக்கு 8 முதல் 10 மாணவ, மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதுதொடர்பான மேலும் விவரங்களை சிவகங்கையில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்