தென்காசியில் தேவர் ஜெயந்தி விழா; அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தென்காசியில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள தேவர் சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-10-30 18:45 GMT

தென்காசியில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள தேவர் சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா தென்காசியில் நேற்று கொண்டாடப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தேவரின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு அதற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. மேலும் தென்காசி கீழப்புலியூரில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம். பி., நகராட்சி தலைவர் சாதிர், ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், சீனித்துரை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமிதுரை, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஷமீம் இப்ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தென்காசி மலையான் தெருவில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் சுடலை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், மாவட்ட மகளிர் அணி தலைவி சந்திரகலா, மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சிவ சீதாராமன், மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் மந்திரமூர்த்தி தலைமை தாங்கினார். மண்டல் பார்வையாளர் ஆனந்தி முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன், ராமநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் மகாராஜன் கலந்து கொண்டார். மலையான் தெருவில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமராஜா, பாண்டித்துரை, மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துக்குமார், முத்துலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்