தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலில்மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

Update: 2023-01-28 18:45 GMT

தேவதானப்பட்டியில் பழமை வாய்ந்த மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மன் சிலை கிடையாது. மூலஸ்தானத்தில் கதவிற்கு தான் பூஜை நடைபெறும். கதவு திறக்கப்படுவதில்லை. மூடப்பட்ட கதவுக்கு தான் 3 வேளை பூஜை நடைபெறுகிறது. தீபாராதனைக்கு முன் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சிவராத்திரி திருவிழா வருகிற 18-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் திருவிழாவிற்காக கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி பரம்பரை அறங்காவலர்களால் காமக்காளுக்கு சிரார்த்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தி முகூர்த்த நாள் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் வேலுச்சாமி, பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்