பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம்

பிளஸ்-2 தேர்வில் பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் வெளியானது.

Update: 2023-05-08 19:28 GMT


பிளஸ்-2 தேர்வில் பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் வெளியானது.

100 சதவீதம் மதிப்பெண்கள்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாவட்டத்தில் பாடவாரியாக 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

இயற்பியல் 28, வேதியியல் 126, கணிதம் 27, கணினி அறிவியல் 169, உயிரியல் 31, தாவரவியல் 32, விலங்கியல் 4, வரலாறு 20, பொருளியல் 50, வணிகவியல் 296, கணக்குப்பதிவியல் 241, புள்ளியியல் 20, புவியியல் 4.

அதேபோல வணிக கணிதம் 27, கணினி பயன்பாடு 145, கணினி தொழில்நுட்பம் 5, அடிப்படை மின்பொறியியல் 2, வேளாண் அறிவியல் 4, அலுவலக மேலாண்மை 1.

சாதனை

பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி வி.எஸ்.கே. துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நாகஜோதி 596 மதிப்பெண்களும், சிவகாசி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த துர்கா 596 மதிப்பெண்களும், சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி லக்மிதர்ஷனா 595 மதிப்பெண்களும், அருப்புக்கோட்டை ரமணா வித்யாலயா பள்ளியை சேர்ந்த குரு பூர்ணிமா 595 மதிப்பெண்களும், சிவகாசி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த வைஜெயந்தி சுபிஷ்டா 594 மதிப்பெண்களும், அருப்புக்கோட்டை ரமணா வித்யாலயா பள்ளியை ேசர்ந்த சவுமியா 594 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர்.

சாதனை படைத்த மாணவர்களை அனைவரும் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்