கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவிற்கான முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம்

கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவிற்கான முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-22 18:57 GMT

நாளை தொடக்கம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 126 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் ரேஷன் அட்டையை பதிவு செய்துள்ள ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்பப் பெற்று பதிவு செய்வதற்கான முதற்கட்ட சிறப்பு முகாம்கள் அந்தந்த ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளின் அருகே நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன் விவரம் வருமாறு:-

பெரம்பலூர் மாவட்டத்தில் முதற் கட்டமாக பெரம்பலூர் வருவாய் வட்டத்தில் வேலூர், மேலப்புலியூர் (கிழக்கு, மேற்கு), லாடபுரம் (கிழக்கு), அம்மாபாளையம், பொம்மனப்பாடி, சத்திரமனை, களரம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களிலும், வேப்பந்தட்டை வருவாய் வட்டத்தில் மலையாளப்பட்டி, உடும்பியம், தொண்டமாந்துறை (மேற்கு, கிழக்கு), வேப்பந்தட்டை (வடக்கு, தெற்கு), வெங்கனூர், வெண்பாவூர், தழுதாழை, வெங்கலம் (மேற்கு, கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களிலும் ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

குன்னம்-ஆலத்தூர்

இதேபோல் குன்னம் வருவாய் வட்டத்தில் புதுவேட்டக்குடி, ஓலைப்பாடி (கிழக்கு, மேற்கு), துங்கபுரம் (வடக்கு, தெற்கு), வடக்கலூர், பரவாய் (கிழக்கு, மேற்கு), வசிஷ்டபுரம், ஒகளூர் (மேற்கு, கிழக்கு), கிழுமத்தூர் (தெற்கு, வடக்கு), பெரியம்மாபாளையம், அத்தியூர் (வடக்கு, தெற்கு), திருமாந்துறை, வயலப்பாடி, பெரியவெண்மணி (மேற்கு, கிழக்கு), குன்னம், கீழப்பெரம்பலூர், சு.ஆடுதுறை, வரகூர், அகரம்சீகூர், கொளப்பாடி, காடூர் (தெற்கு, வடக்கு), பெண்ணக்கோணம் (தெற்கு) ஆகிய வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. ஆலத்தூர் வருவாய் வட்டத்தில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், மாவிலங்கை, இரூர், புதுஅம்மாபாளையம், பாடாலூர் (கிழக்கு, மேற்கு), சிறுவயலூர், து.களத்தூர், கண்ணப்பாடி, தேனூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

பேரூராட்சி பகுதிகள்

குரும்பலூர் பேரூராட்சி பகுதியில் குரும்பலூர் (வடக்கு, தெற்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், பூலாம்பாடி பேரூராட்சி பகுதியில் பூலாம்பாடி (மேற்கு, கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களிலும், அரும்பாவூர் பேரூராட்சி பகுதியில் அரும்பாவூர் வருவாய் கிராமத்திற்கும், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் பெண்ணக்கோணம் (வடக்கு) வருவாய் கிராமங்களிலும் ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் முதற் கட்டமாக விண்ணப்பப் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ள ரெங்கநாதபுரம், சத்திரமனை ஆகிய பகுதிகளில் அரசு தொடக்கப்பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்