நீதிமன்ற உத்தரவுப்படி 2,704 மதுபாட்டில்கள் அழிப்பு கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை

நீதிமன்ற உத்தரவுப்படி 2,704 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் எந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.

Update: 2022-11-25 18:45 GMT


புதுச்சேரியில் இருந்து கடந்த மாதம் 21-ந்தேதி கள்ளக்குறிச்சி பகுதிக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 2 ஆயிரத்து 704 மதுபாட்டில்கள் மற்றும் 105 லிட்டர் சாராயத்தை கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் பறிமுதல் செய்ததோடு, அதனை கடத்தி குற்றவாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை கீழே கொட்டி அழிக்குமாறு மதுவிலக்கு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் நேற்று கள்ளக்குறிச்சி தாசில்தார் சத்தியநாராயணன், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் மூர்த்தி, ஏமப்பேர் கிராம நிர்வாக அலுவலர் மனோஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் ரோடு ரோலர் எந்திரம் மூலம் 2704 மதுபாட்டிகள் மற்றும் 105 லிட்டர் சாராயம் கீழே கொட்டி அழிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்