சாதிய அடையாளங்கள் அழிப்பு

சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டது.;

Update: 2023-08-20 19:00 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் போலீசார் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி, பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உறுதிமொழி எடுக்கப்பட்டு சாதியை அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சாதிய அடையாளங்களை முத்தையாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம், முள்ளக்காடு, பாரதிநகர், அத்திமரப்பட்டி, சுந்தர்நகர், ராஜீவ்நகர், ஜே.எஸ்.நகர் பகுதியில் மின்கம்பம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, குடிநீர் தெருகுழாய், பொது சுவர்கள் என பல்வேறு இடங்களிலும் அழிக்கப்பட்டது. சாதிய அடையாளங்கள் வரையப்பட்ட இடங்களில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர், மாநகராட்சி கவுன்சிலர் முத்துராஜ் மற்றும் போலீசார் பெயிண்ட் வைத்து அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்