கதண்டுகள் தீவைத்து அழிப்பு

திருமுல்லைவாசல் ஊராட்சியில் கதண்டுகள் தீவைத்து அழிக்கப்பட்டது.;

Update:2023-09-23 00:15 IST

சீர்காழி:

சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடற்கரை கிராமமான திருமுல்லைவாசல் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் திருமுல்லைவாசல், தொடுவாய், ராதநல்லூர், விழுதலைக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை கொண்டதாகும். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தொடுவாய், விழுதலைக்குடி, ராதா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விஷ கதண்டுகள் சாலை ஓரம் உள்ள பனைமரம், முட்செடிகள், தென்னை மரம், பலாமரம் உள்ளிட்ட மரங்களில் கூடு கட்டி இருந்து வருகிறது. இந்த நிலையில் பலத்த காற்றுகள் அடிக்கும் பொழுது சாலையில் செல்பவர்களை கதண்டுகள் கடித்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தோடு சாலையில் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. மேலும் கதண்டுகள் கடித்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தமிழ்ச்செல்வன் சீர்காழி தீயணைப்பு நிலைய துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல்வேறு இடங்களில் கூடுகட்டியிருந்த கதண்டுகளை தீயிட்டு அழித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்