கல்வராயன் மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2023-06-04 18:45 GMT


கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் உள்ள எருக்கம்பட்டு கொத்துப்பண்ணை பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கல்வராயன்மலை இன்னாடு வனச்சரக அலுவலர் சந்தோஷ் தலைமையில் வனவர் பாலச்சந்திரன், வேல்முருகன் உள்ளிட்ட வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று, யாரேனும் சாராயம் காய்ச்சுகிறார்களா என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு அடர்ந்த வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 10 பேரல்களில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை வனத்துறையினர் கண்டுபிடித்து, அங்கேயே கொட்டி அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்