கல்வராயன்மலையில்சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.;

Update: 2023-09-10 18:45 GMT


கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலை அருகில் உள்ள நத்தம் பள்ளி கிராமத்தில் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு சாராய ஊரல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், நத்தம்பள்ளி வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தலா 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 பிளாஸ்டிக் பேரல்களில் 600 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். அங்கு சாராய ஊறல் அமைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்