8 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

பேரணாம்பட்டு அருகே 8 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2023-01-08 17:21 GMT

பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் குப்பன், பிரபாகரன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தாரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சபாஒத்தினம், ராமானுஜம், சாலமன் மற்றும் போலீசார் 3 குழுக்களாக சென்று சாத்கர் மலையில் உள்ள கங்காச்சரம், அல்லேரி, பன்னிகுட்டை பள்ளம், நிம்மங்கானாறு உள்ளிட்ட இடங்களில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பதுக்கி வைத்திருந்த சுமார் 8 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், சாராய அடுப்புகளை கண்டுபிடித்து அழித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராய வியாபாரிகள் 14 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்