5,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 5,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கச்சிராயப்பாளையம்
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் அதிகாலை முதல் கல்வராயன்மலை பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குரும்பாலூர் கிழக்கு மற்றும் மேற்கு ஓடையில் மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்த 5,200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 200 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்த போலீசார் அவற்றை சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் சாராயம், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை போன்ற சட்டத்துக்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.