கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2023-03-12 18:45 GMT

கச்சிராயப்பாளையம் 

கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்வராயன்மலையில் உள்ள அத்திப்பாடி வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக ஒரே இடத்தில் 17 பேரல்களில் 3 ஆயிரத்து 400 லிட்டர் சாராய ஊறல் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார், அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறல் அமைத்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்