1,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

தமிழக-ஆந்திர எல்லையில் 1,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2023-06-24 18:06 GMT

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழக ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள வாணியம்பாடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொரிப்பள்ளம் பகுதியில், வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரெண்டு விஜயகுமார் ஆலோசனையின்பேரில் வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய கீர்த்தி ஆகியோர் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர்

அப்போது மொத்தம் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும், சாராய ஊறல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் அவர்கள் அழித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்