கதண்டுகள் தீ வைத்து அழிப்பு

மடப்புரம் ஊராட்சியில் கதண்டுகள் தீ வைத்து அழிக்கப்பட்டது.;

Update: 2023-09-24 18:45 GMT

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்புரம் ஊராட்சியில் ரெகுநாதபுரம் குடியிருப்பு பகுதியில் பனைமரம், தென்னை மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன. இந்த கதண்டுகள் அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்களை கடித்து வந்தன. இது குறித்து மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜின்னிசா செல்வநாயகம் உத்தரவின் பெயரில் பணியாளர்களை கொண்டு கதண்டுகள் தீ வைத்து அழிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்