சட்டங்கள் இருந்தாலும் பெண்களுக்கு இன்னும் முழு பாதுகாப்பு இல்லை
சட்டங்கள் இருந்தாலும் பெண்களுக்கு இன்னும் முழு பாதுகாப்பு இல்லை என விழிப்புணர்வு முகாமில் நீதிபதி இருதயராணி கூறினார்.;
சட்டங்கள் இருந்தாலும் பெண்களுக்கு இன்னும் முழு பாதுகாப்பு இல்லை என விழிப்புணர்வு முகாமில் நீதிபதி இருதயராணி கூறினார்.
விழிப்புணர்வு முகாம்
விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழுமம் விருதுநகர் வட்ட, சட்ட பணிகள் குழுமம் இணைந்து முதியோருக்கான சட்டங்கள் குறித்தும், பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் போக்சோ சட்டங்கள் குறித்தும் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாமிைன நடத்தியது.
இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையகுழுவின் செயலாளர், சார்பு நீதிபதி இருதய ராணி கலந்துகொண்டு பேசினார்:- அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த நாட்டின் வருங்கால தூண்கள். வருங்காலத்தில் உங்கள் பெற்றோரை கவனிக்காமல் கைவிடக்கூடாது.
பாதுகாப்பு சட்டங்கள்
பெண்கள் பாதுகாப்புக்காக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் பெண்களுக்கு முழுமையாக பாதுகாப்பு கிடைப்பதில்லை. உள்ளாட்சி பதவிகளில் பெண்கள் இருந்தாலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் ஜவகர் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார். இதனைத்தொடர்ந்து நீதிபதி இருதய ராணி முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கிருந்த முதியோர் மற்றும் குழந்தைகளிடம் குறைகளை அவர் கேட்டறிந்தார்.