திருப்பதிக்கு ஒட்டுமொத்த கிராமமே படையெடுத்ததால் வெறிச்சோடிய தெருக்கள்...!

தருமபுரி அருகே வசந்தபுரம் கிராம மக்கள் 4 வருடங்களுக்கு ஒருமுறை திருப்பதிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-12-11 09:15 GMT

தருமபுரி,

திருப்பதி கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்த, 400க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றாக சென்றதால், கிராமமே வெறிச்சோடியுள்ளது. இரவு நேரத்தில், இந்த கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தருமபுரி அருகே உள்ள வசந்தபுரம் பகுதியில், 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் வசிப்பவர்களில், 80 சதவீதம் பேர் உறவினர்கள். ஆண்டுதோறும் திருப்பதி கோவிலுக்கு, காணிக்கை செலுத்த தனித்தனியாக சென்றனர். நேற்று முன்தினம், கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், கோவிலுக்கு தனி குடும்பமாக செல்லாமல், கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்றாக கோவிலுக்கு வருமாறு அருள்வாக்கு கூறினார். அதைத் தொடர்ந்து, 400 குடும்பங்களைச் சேர்ந்த, 900 பேர், 20 வாகனங்களில் திருப்பதிக்கு சென்றனர். இதையடுத்து, கிராமமே வெறிச்சோடி காணப்பட்டது. பாதுகாப்பிற்காக போலீசார் இரவு நேரத்தில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்