வெறிச்சோடிய மணல் குவாரி
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மணல் குவாரிகளில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் அய்யம்பேட்டை அருகே உள்ள மணல் குவாரி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மணல் குவாரிகளில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் அய்யம்பேட்டை அருகே உள்ள மணல் குவாரி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
மணல் குவாரி
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே புத்தூரில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் புத்தூர் முதல் பட்டுக்குடி கிராமம் முடிய இந்த மணல் குவாரி செயல்படுகிறது. இந்த மணல் குவாரியில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான டிராக்டர் மற்றும் லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் குவாரிகளை நடத்திவரும் தொழில் அதிபர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
தொழில்நுட்ப கோளாறு
பல்வேறு குழுக்களாக சென்று அமலாக்கத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக புத்தூர் மணல் குவாரி நேற்று நாள் முழுவதும் இயங்காமல் வெறிச்சோடி காணப்பட்டது. மணல் ஏற்றி வந்த லாரிகள் வரிசையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இது குறித்து குவாரி நிர்வாகிகள் கூறும் போது, 'கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக மணல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.