தேனீவளர்ப்பு செயல் விளக்கம்

தேனீவளர்ப்பு செயல் விளக்கம்

Update: 2023-05-13 18:45 GMT

நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி கிராமத்தில் தேனீ வளர்ப்பு குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. நீடாமங்கலம், வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் வைரமுத்து செயல் விளக்கத்தை செய்து காண்பித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேனி வளர்ப்பு தொழிலில் ஈடுபடுபவர்கள் சில பராமரிப்பு நுட்பங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் தேனீ வளர்ப்பு சிறிய அளவில் தொடங்குவதே நன்மை தரும். தேனீக்களை வளர்ப்பதற்கு பயிற்சி மிக அவசியம். அடுக்கு பெட்டி தேனீக்களை மட்டுமே பெட்டிகளில் வைத்து வளர்க்கலாம். தேனீ கூட்டங்கள் எங்கெங்கு இயற்கையில் அதிகமாக காணப்படுகிறதோ, அந்த இடங்கள் பொதுவாக தேனீக்கள் வளர்ப்பதற்கு ஏற்றவை. தேனி வளர்ப்பு நல்ல வெற்றி பெறவும் அதிக தேன் மகசூல் பெறவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் இரண்டு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் தேனீக்கு மதுரம் மற்றும் மகரந்தம் தரும் மரம் செடி, கொடிகள் இருக்க வேண்டும். தேனீக்களை வளர்க்க விவசாய நிலங்கள் தேவையில்லை. தேனி பெட்டிகள் நிழல் தரும் மரங்களுக்கு கீழ் அமைக்க வேண்டும். வெயில் படுமாறு இடத்தில் வைக்க வேண்டும்.எறும்பு கூடு உள்ள இடங்களில் தேனி பெட்டிகளை வைக்கக் கூடாது என்றார். இதில் உதவி வேளாண்மை அலுவலர் சந்திரலேகா, உதவி தொழில்நுட்ப மேலாளர் அருள்செல்வி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்