கைதிகளுக்கு தோல் மருத்துவ முகாம்

பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு தோல் மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-08-27 19:12 GMT

சமூகத் தோல் தினத்தையொட்டி பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதிகளுக்கு நேற்று தோல் மருத்துவ முகாம் நடந்தது. இந்த சிறப்பு முகாமை நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தோல் துறை பேராசிரியர் டாக்டர் நிர்மலா தேவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.இந்த முகாமில் 11 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் ஜெயிலில் உள்ள 1320 கைதிகளுக்கும் மற்றும் 234 ஊழியர்களுக்கும் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்தனர். மற்றும் மேல் சிகிச்சைக்கான 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் இந்த முகாமில் கைதிகள் மற்றும் சிறை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம், தோல் சுகாதார கையெடும் வழங்கப்பட்டது. இதில் ஜெயில் சூப்பிரண்டு வசந்த கண்ணன், ஜெயிலர் பழனிவேல், டாக்டர்கள் ஹர்ஷவர்சினி, ஹரினி, ரஜில்லா, மாலிக்பாபு, அருள், வித்யா முனிவேல், நரேந்திர குமார், லிவ்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்