தோல் நோய் சிகிச்சை முகாம்

முத்துப்பேட்டையை அடுத்த வேப்பஞ்சேரி கிராமத்தில், தோல் நோய் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;

Update:2023-07-04 00:15 IST

திருத்துறைப்பூண்டி:

முத்துப்பேட்டையை அடுத்த வேப்பஞ்சேரி கிராமத்தில், தோல் நோய் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் ஏழுமலை தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொது மக்களுக்கு சிகிச்சையளித்தார். அதனை தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று, தோல் நோய் அறிகுறிகள் குறித்து கணக்கெடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர். இதில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் கதிரேசன், பகுதி செவிலியர் வசந்தா, செவிலியர் ஜாஸ்மின் டெய்சி, மருந்தாளுனர்கள் வேதமணி, விஜயேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், பாலசண்முகம் மற்றும் இடைநிலை சுகாதார செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்