குரங்கின் தாகம் தீர்த்த போலீஸ் துணை சூப்பிரண்டு

போலீஸ் துணை சூப்பிரண்டு குரங்கின் தாகத்தை தீர்த்தார்.

Update: 2023-05-06 19:09 GMT

பெரம்பலூர் அருகே எளம்பலூரில் பிரம்மரிஷி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் தற்போது வாரந்தோறும் சனிக்கிழமையில் பெரம்பலூர் மாவட்ட போலீசார் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வழக்கம் போல் காலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையிலான போலீசார் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மலையில் குரங்கு ஒன்று தண்ணீர் தாகத்துடன் நின்று கொண்டிருந்தது. இதனை கண்ட மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி பாட்டிலில் இருந்து தண்ணீரை குரங்குக்கு கொடுத்து, அதன் தாகத்தை தணித்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமியின் மனிதாபிமான இந்த செயலை மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட போலீசார் வெகுவாக பாராட்டினர். மேலும் குரங்குகளுக்கு போலீசார் சார்பில் வாழைப்பழங்கள் போடப்பட்டன. அதனை எடுத்த குரங்குகள் வயிறாற சாப்பிட்டு சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்