துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் மண்டல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-06-14 20:44 GMT


விருதுநகர் மாவட்டத்தில் மண்டல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பணியிட மாற்றம்

அதன் விவரம் வருமாறு:-

திருச்சுழி யூனியன் (ம-2) மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் செல்வம், விருதுநகர் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (ம-1) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சாத்தூரில் பணியாற்றும் சண்முக லட்சுமி, விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (ம-4) பணியாற்றும் செந்தில் ராணி அருப்புக்கோட்டை யூனியனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வத்திராயிருப்பு

அருப்புக்கோட்டை யூனியனில் பணியாற்றும் (ம-3) விஜயலட்சுமி, வத்திராயிருப்பு யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவராக (ஊராட்சிகள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சுழி விடுப்பில் உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, வத்திராயிருப்பு யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (தணிக்கை) மாற்றப்பட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை யூனியன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, திருச்சுழி யூனியன் தணிக்கை பிரிவு துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார். திருச்சுழி யூனியன் தணிக்கை பிரிவில் பணியாற்றிய சந்தானவள்ளி, அருப்புக்கோட்டை யூனியன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்