தேசிய தரச்சான்று பெறுவதற்கான பணிகளை துணை இயக்குனர் ஆய்வு
வாணியம்பாடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று பெறுவதற்கான பணிகளை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி நியூ டவுன் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று பெறுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டி.ஆர்.செந்தில் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.
உடன் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச.பசுபதி, மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.