சுகாதார பணிகள் துணை இயக்குனர் திடீர் ஆய்வு
வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி
வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் த.ரா.செந்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெற்று வந்த மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை வீடு, வீடாக சென்று அனைவருக்கும் சரியான மாத்திரைகள் வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச.பசுபதி, வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கீதா மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.