முதல்-அமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில்593 பயனாளிகளுக்கு ரூ.1.49 கோடி வைப்புத்தொகைகலெக்டர் சரயு வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 593 பயனாளிகளுக்கு ரூ.1.49 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை ரசீதுகளை கலெக்டர் சரயு வழங்கினார்.

Update: 2023-09-19 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 593 பயனாளிகளுக்கு ரூ.1.49 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை ரசீதுகளை கலெக்டர் சரயு வழங்கினார்.

குறை தீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக நலத்துறை சார்பாக, முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று தொடங்கி வைத்து, 593 பயனாளிகளக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வைப்புத்தொகை ரசீதுகளை பயனாளிகளிடம் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் விகிதம் குறைந்து, உயர் கல்வி படிக்கும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது. மேலும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமை தோறும் இத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

வங்கி கணக்கில் வரவு

அதன்படி, இந்த சிறப்பு முகாமில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த 593 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வைப்புத்தொகை ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 250 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை பெண் குழந்தைகள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன், அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கப்படும்.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் 800-க்கும் மேற்பட்ட பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வுத்தொகை பெற்று உயர்கல்வி பயன்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத்தொகை பெற்று வழங்கவும், இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, வட்டார வள அலுவலர்கள் உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்