பாகிஸ்தான் தேசியகொடி ஏற்றியவரை நாடு கடத்த வேண்டும்: இந்து எழுச்சி முன்னணி புகார்
உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றியவரை நாடு கடத்த வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணியினர் புகார் தெரிவித்தனர்
இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், "உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் சல்மான் என்பவர் தனது வீட்டில் பாகிஸ்தான் தேசியகொடியை ஏற்றியுள்ளார். இது தேச விரோத செயலாகும். அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவரையும், அவரோடு இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களையும் நாடு கடத்த வேண்டும்" என்று கூறியிருந்தனர்.