சமயபுரம் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு
சமயபுரம் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடந்தது.
சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அம்மன் காலையில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவில் ஆஸ்தான மண்டபத்தில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மேற்பார்வையில் மணியக்காரர் பழனிவேல் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.