டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
சுகாதார அலுவலர்கள், பணியாளர்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்;
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின்படியும், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அஜித்பிரபு குமார் அறிவுறுத்தலின்படியும் கொள்ளிடம் வட்டார அளவிலான சுகாதார அலுவலர்கள், பணியாளர்களுக்கு டெங்கு தடுப்பு மற்றும் விழுப்புணர்வு குறித்த கூட்டம் நடந்தது. இதில் கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வளாகங்கள்,வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலக வளாகங்கள்,பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்து வரும் தண்ணீர் தேங்கும் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து கொள்ளிடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியை டாக்டர் ரமேஷ் குமார் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ அலுவலர் சுஜிதா, சுகாதார ஆய்வாளர்கள் கருணாகரன் சதீஷ்குமார் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.