வீடுகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீடுகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்று துப்புகானப்பள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.

Update: 2022-10-02 18:45 GMT

ராயக்கோட்டை:

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீடுகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்று துப்புகானப்பள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.

கிராம சபை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி சூளகிரி ஊராட்சி ஒன்றியம் துப்புகானப்பள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் செலவின அறிக்கை பொதுமக்களுக்கு படித்து காட்டப்பட்டது. தொடர்ந்து குடிநீர் வினியோகத்தை உறுதி செய்தல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நடவடிக்கை

தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், மழை காலம் தொடங்க உள்ள நிலையில் கொசுகள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பு வீடுகளை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அங்கன்வாடி கட்டிடம், பகுதி நேர ரேஷன் கடை, தனிநபர் வீடுகள், போக்குவரத்து வசதி, புதிய மின் கம்பங்கள் அமைப்பது தகுதியின் அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சண்முகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தா, வட்டார மருத்துவ அலுவலர் திருலோகசுந்தர், மகளிர் மேம்பாட்டு உதவி திட்ட அலுவலர் பிரபாகர், வெண்ணிலா, தாசில்தார் அனிதா, ஒன்றியக்குழு உறுப்பினர் வனிதா சீனிவாசன், ஊராட்சி துணை தலைவர் மஞ்சுநாத், ஊராட்சி செயலாளர் சையத் ரியாஸ் அகமது மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்