டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

செம்பனார்கோவிலில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

Update: 2022-07-22 16:40 GMT

செம்பனார்கோவிலில், பொது சுகாதாரத்துறை சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் சந்திரகுமார் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் வரவேற்றார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், டெங்கு காய்ச்சல் குறித்து மாணவிகளிடையே பேச்சுப்போட்டி நடந்தது. இதில் மக்களை தேடி மருத்துவ சுகாதார ஆய்வாளர்கள், டெங்கு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவ அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.




Tags:    

மேலும் செய்திகள்