தேவகோட்டை
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி தேவகோட்டை ராம்நகர் தே-பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பேரணியை தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா கணேசன் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி ராம்நகரில் இருந்து தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். மேலும் டெங்கு ஒழிப்பு சம்பந்தமான அறிவுரைகளை பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ரோட்டரி சங்க தலைவர் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.