டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் முதுகுளத்தூர் அரசு தொழில் பயிற்சி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அரசு தொழில் பயிற்சி கல்லூரி முதல்வர் வாளை ஆனந்தம் தலைமை தாங்கினார். இதில் கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் நேதாஜி டெங்கு காய்ச்சல் அறிகுறி மற்றும் டெங்கு தடுக்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் டெங்கு பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளை விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார மேற்பார்வையில் கருணாகர சேதுபதி, அரசு தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள் குருநாதன், பாலமுருகன், முருகானந்தம், மணிவர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.